முன்னா - பின்னா

பொருளற்ற பெயர்களை
இனிய பெயர்களாய் எண்ணி
பிள்ளைகளுக்குச் சூட்டுவதில்
தமிழரிடை கடும் போட்டி.
எதிர் வீட்டுப் பெண்ணுக்கும்
எனக்கும் ஒரே நாளில்
முதல் மகப்பேறு.
அவளுக்கு பிறந்தது ஆண் குழந்தை
நான் பெற்றதோ பெண் குழந்தை.
அவள் குழந்தையின் பெயர் 'முன்னா'
என் செல்லத்தின் பெயர் 'பின்னா'.
இரண்டில் ஒன்று பொருளற்ற பெயர்.
இன்னொன்றோ வெளிநாட்டுப் பெயர்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Munna = Meaningless Hindi Masculine name
Pinna = Horse lover. German feminine name