மடலரிதாரம் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
(’ளை’ ‘ழை’ இடையின எதுகை)
ஈளை யுடனே யிருமல் குடிவிலகுங்
கோழை மலமகலும் கொம்பனையாய் - நாளும்
அடலுறுக யங்கரப்பான் ஆறாப்புண் ணும்போம்
மடலரிதா ரத்தை மதி
- பதார்த்த குண சிந்தாமணி
மடலரிதாரத்தினால் ஈளை, இருமல், கோழை இவை நீங்கும்; மலம் இளகும்; கயம், கரப்பான், ஆறாப்புண் இவை விலகும்