திசையெ லாங்காணும் தெய்வீக ஊர்வலம் - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து; நிரையில் தொடங்கினால் 12 எழுத்தெண்ணிக்கை தானே வரும்! 2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு; (முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

வசந்த வீணையை வாணியும் மீட்டிட
இசைந்தெ ழுந்த இளவேனில் தென்றலில்
அசைந்த இன்மண ஆலயப் பூக்களும்
திசையெ லாங்காணும் தெய்வீக ஊர்வலம்!

– வ.க.கன்னியப்பன்

கருத்தளித்தவர்: நண்பர் கவின் சாரலன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Oct-22, 10:36 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

மேலே