ஆதியில் வளைந்து

ஓ தமிழ் பேசும் நிறைமதியோரே
நாம் இளகியே இருந்தது போதுமே
ஆதியில் வளைந்து கொடுத்ததால்
எழுத்துள் கலப்பட விதை நுழைய
செழித்தே இருந்த தமிழ் வார்த்தை
கடனால் பிறந்த வேற்று மொழியிடம்
கடன் பெற்ற எழுத்தால் பெருமைக்
கொண்டதாய் காற்றில் தூவிய
கற்றறிந்தவர்களின் பொய்யால்
கட்டுப்பாடுடைய அரசரும் கரைந்தது
கால வெள்ளத்தின் அமில நினைப்பாலே
அந்நாளின் தவறை அழித்திட
துணிந்தே ஆதி தமிழின் மாண்பை
அடர் மொழியின் அழகிய படைப்பால்
அரணாய் மாறியே காத்திடுவோம்
அண்டம் எதிர்ப்பிணும் வளர்த்திடுவோம்.
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (5-Oct-22, 9:52 pm)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : aathiyil valainthu
பார்வை : 27

மேலே