பையனுக்கும் பொண்ணுக்கும் ஒரே பேரு

இரட்டைக் குழந்தைகளைப் பெற்ற இந்து,
பிள்ளைகளுக்கு பேரு வச்சுட்டீங்களா? ஆண் குழந்தை, பெண் குழந்தை. இல்லையா?
@@@@@
ஆமாம்டி நந்தி (நந்தினி). குழந்தைக்கள் பிறந்து பத்து நாளு ஆகுது. மூணாம் நாளே நாங்க மருத்துவ மனையிலேயே எழுதிக் கொடுத்துட்டோம். அவுங்க நகரசபைக்கு அனுப்பியிருப்பாங்க.
@@@@@
சரி. குழந்தைகள் பேரைச் சொல்லுடி இந்து.
நிச்சயமா தமிழ்ப் பேருங்கள வச்சிருக்கமாட்டீங்க.
@@@#@
ஆமாம்டி. இரண்டு குழந்தைகளுக்கும் ஒரே பேரு.
@@@@@
ஒரே பேரா? என்டி அவுங்க பேச ஆரம்பிச்சா எப்பிடி கூப்பிடுவீங்க? குழப்பம் வராதா?
@@@#@
வாடி, போடி, வாம்மா. போடா , வாடா. இதேல்லாம் எதுக்கு இருக்குது?
@@@#@
நீ சொல்லறது சரி தான். சரி. சீக்கிரம் அந்தப் பேரைச் சொல்லுடி.
@@@@@@
அன்மோல். (Anmol). இந்தப் பேரை ஆண் குழந்தைக்கும் வைக்கலாம். பெண் குழந்தைக்கும் வைக்கலாம்.
@@#@@
"ஸ்வீட் இந்தி நேம்"டி இந்து. அர்த்தம் எல்லாம் கேட்க்கமாட்டேன். இந்திப் பேருங்க தான் தமிழர்களுக்கு "ஸ்வீட் நேம்ஸ்".
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Anmol = Priceless, Valuable. Unisex Indian name.

எழுதியவர் : மலர் (5-Oct-22, 6:48 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 94

மேலே