அவளும், நானும், அச்சமயமும் - மீள்

அவளும், நானும், அச்சமயமும்
============================

அவளைச் சுற்றியுள்ள ஒருவரும் தராததை
அவளுக்கெனத் தருகிறேன்
அது அவளது "சமயம்"

அந்த சமயம்
அவளைக் காணுகிறபோது
அவளைச் சுற்றி ஜொலிக்கின்ற எதுவுமே
தென்படுவதில்லை
அவள் அத்தனை அழகு

ஒருபெண்
எப்போது அதிகபட்சமாக சந்தோஷமடைகிறாள்
தெரியுமா ?

ஆச்சரியங்களை ஒருவரிடமிருந்து பெறும்போது/
புன்சிரிப்பு/
சின்னஞ்சிறிய பரிசுகள்/
சிறு வார்த்தைகள்/
இஷ்ட்டப்பட்ட ஆடையை
உடுத்துருங்கி வருகையில்
அவள் அழகாய் இருக்கிறாள் என
சொல்லிடும் போது/
அவன் அவளை
தனைமறந்து வாய் நோக்கியிருக்கும்போது /
கூட்டத்தினிடையில்
யாருமறியாமல் அவளுடைய
கைப்பிடித்திடும்போது/
அவளறியாமல் அவளை
பின்னாலிருந்து அணைத்திடும்போது/
அவள் எதிர்பார்த்திராத ஏதோ ஒரு சமயத்தில்
சட்டென்று அவள் கன்னத்தில்
முத்தமிடும்போது /
அவள் அவளைக் குறித்து
சிந்தித்திருக்காத நேரத்தின்போது/
அவனோடிருக்கும்
அந்த நிமிடங்களைத் தவிர
பாக்கி உள்ள நிமிடங்களை
அவள் மறந்திருக்கும்போது/
பரிச்சயமில்லாத ஒரு புதிய வாசனை
அவள் சரீரத்தில் பதிவாகும்போது/
தவறென்று தள்ளிவிட்டவைகளை எல்லாம்
தனித்திருக்கும்போது
சரியென்று நினைக்கும்போது/
அவள் காதலித்திருப்பாள்

வேண்டுமென ஆக்கிரகம் கொண்ட
எதையும்
வேண்டாமென்று ஒதுக்கிடும் சக்தி
ஒரு பெண்ணிடம் மட்டுமே உள்ளது

பெண்,
மழையைப்போல,
இடைக்கு பொழிவதும்,
பொழிந்து கொண்டிருக்கும் போதே
தூறுவதும் என
அவளிடம்
நேடிய நிமிஷங்கள் தான்
நேடாத நிமிஷங்களைவிட அழகு//.
இந்த நிமிஷங்கள் தான்
தயக்கங்களுடன்
அவள் அவனை அனுமதிக்கிறேன் என்று
சொல்லாமல் சொல்லவும் செயகின்றன//
ஏனோ முறிந்துவிழுந்த வேனல் சில்லுகள் போல்
அவள் மனமிருந்தாலும்
அவன்-மழையில் நனையாமல்
உள்ளக்கொதியோடு ஒளியும் பார்வையுள்,
ஒரு தணல் போல்,
அணையாத காற்றுபோல்,
சிறுபூவினுள் தேங்கியே அவள் சமயம்//

எழுதியவர் : பூக்காரன் கவிதைகள் - பைராக (10-Oct-22, 8:43 am)
பார்வை : 137

மேலே