பூவிழிகள் மெல்லத் திறந்து

பூவிழிகள் மெல்லத் திறந்து .......மௌனத்தில் யாழிசை பாடுதோ
பூவிதழ்கள் மௌனமாய் விரிந்து
......கவிஞர்கள் வேந்தன் கம்பன்
காவியம் பேசுதோ காதல் சொல்லுதோ
.......புன்னகைப்பூ தூவுதோ
தேவியுன் தரிசனத்தில் மாலை
......வானும் மஞ்சள் தூவுதே !


....அறுசீர் கழிநெடில் ஆசிரியவிருத்தம்
கம்பனும் கையாண்ட பாவினம்

எழுதியவர் : கவின் சாரலன் (10-Oct-22, 9:26 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 98

மேலே