சேற்றோடு வாழும் செந்தாமரைக் கொடி

(#வேட்டை -இதழுக்காக-எழுதிய-சிறுகதை )

கதையில் இடம் பெறும்
பாத்திரத்துக்கு உரிய பெயர்

கதாநாயகி #தாமரை
பெரிய நாட்டாமை #பொன்னுத்தேவர்
நாட்டாமை மகன் #தேவாதேவர்
பொதுவானவர் கண்ணாடித் #தாத்தா

தோழிகள் #மீனா #ராணி #குமாரி #மேரி



(சேற்றோடு தாமரை ஒன்று சேர்ந்து நடக்கையிலே நாத்தோடு வந்த நத்தை மெதுவாக பாதம் ஏறியதோ நான் அறியேன் .)

சிலிர்த்தது தாமரையின் மேனி உடனே துள்ளிக் குதித்தாள் தாமரை தள்ளி நின்ற கன்னியர்கள் மேலும் சேற்றுத்தண்ணி சிதறியது.என்னடியம்மா தாமரை இப்புடி குதிக்கின்றாயே ?என்று கண்ணாடித் தாத்தா வினாவினார் வெட்கத்தை முகத்தில் எடுத்தவாறே தாமரை கண்ணாடித் தாத்தா பக்கத்தில் சென்று உரைத்தாள் ஒன்றுமில்லை தாத்தா என அவள் ஆரம்பிக்க சொல்லி முடிக்கும் முன்னே கண்ணாடித் தாத்தா கேட்டார் ஒன்றும் இல்லாமலா ? நீ கதக்களி ஆடினாய் என்று. உடனே தாமரை ஐயோ தாத்தா அதைத்தானே சொல்ல வந்தேன் .எங்கே விட்டிங்க ச்சும்மா குறுக்கே பேசினா எப்படி என்றாள் சரி சொல்லு என கண்ணாடித் தாத்தா வாயைப் பொத்திக்கிட்டார் நத்தை காலில் ஏறிவிட நானோ ஏதோ பூச்சுயோ பாம்போ என்று பயந்து விட்டேன் தாத்தா காலை உதறினேன் அதுதான் என்று சிரிப்போடு சொன்னாள் எட்டி நின்ற மீனா கூறினாள் நல்லா உதறினாய் போ இங்கே பார் சேலை எல்லாம் சேறு என்றாள் கூடி இருந்தவர்களும் ஆமா போட்டார்கள் கொஞ்சம் கடுப்போடு தாமரை சொன்னாள் கோபிச்சிக்காத அக்காச்சி நான் என்ன வேணும் என்னா செய்தேன் பயந்துதானே என்றாள். இருடி உன்னை அப்புறம் பாத்துக்கிறேன் என்றாள் சிரித்தவாறே. ஈஈ என்று இழித்துக் கொண்டே வேளாண்மைக்குள் மீண்டும் இறங்கினாள் தாமரை. இரு கரங்களும் நாத்து நட அவளது இரு விழியும் அங்கும் இங்கும் நத்தையைத் தேடியது வேலை வேகம் குறைந்தது நேரம் கடந்தது. சரியான நேரத்துக்கு முடிக்க வேண்டிய நாத்துக் கட்டுக்களை முடிக்க முடியவில்லை மேல் பார்வைக்கு வந்த நாட்டாமை மகன் தேவா கொதி நீராய் கொதித்தான் தாமரையைப் பார்த்து அனாகரியமான வார்த்தைகளை அரிவாள் போல் வீசினான் மறு முறை இது போல் தவறு விட்டால் அரைவாசி சம்பளம் மட்டுமே கொடுப்பதாக எச்சரித்து நகர்ந்தான். அவன் சென்றதும் அமைதி நிழவியது சிறுது நேரம் கண்ணாடித் தாத்தா செரிமிக் கொண்டு சொன்னார் பொண்ணுங்களா என்ன மௌனம் அவன் கிடக்கான் பொடி பயல் இப்படித்தான் கத்துவான் பெரிய நாட்டாமை நல்ல மனிதர் அவருக்கு இப்படி ஒரு பிள்ளை நாம் அவரை மதிக்க வேணும் அவர் சொன்னா புரிஞ்சுக்குவார் விடுங்க நடங்க நேரமாச்சு என கூறிய வாறு கையாலும் செய்கை காட்டினார் எட்டி போட்டு போங்க கண்ணுங்களா என்று அழைத்தார் எல்லோரும் நடக்க தொடங்கினர் ஏனையோர் பேச்சும் சிரிப்புமாக சென்றனர் தாமரை மட்டும் ஆழ்ந்த சிந்தனையோடு நடந்தாள்.

மறுநாள் வயல் காட்டுக்கு வந்தவள் முன்னையப் போல் கலகலப்பு ஏதும் இன்றி தான் உண்டு வேலை உண்டு என்று இருந்தாள் அவளின் அருகே வந்த ராணி தோளைத் தொட்டு அழுத்தி ஏன்டி? உம் என்று இருக்கா நேற்று நடந்தவையை இன்னுமா நினைச்சிக்கிட்டு இருக்கா? என்றாள் ராணி அப்படி இல்லையடி ராணி என் தலை வலிப்பது போல் இருக்கு என்று மழுப்பினாள் தாமரை உடனே ராணி ஓ அப்படியா? சரி இரு என்னிடம் மருந்து உண்டு தருகிறேன் என்றவாறே தன் முந்தானை சேலையில் இருந்த முடிச்சை அவுத்து கொடுத்தாள் சிறு மாத்திரை ஒன்று இந்தா இப்போதே போடு அரை மணி நேரம் தான் காத்தாய் பறந்து விடும் தலைவலி என்று சொன்னாள் சரிடி என்ற தாமரை அவள் முன் நிலையிலேயே அதை சாப்பிட்டாள் தாமரைக்கு தலை வலியும் உண்டு அதை விட நேற்றைய நிகழ்வினால் ஏற்பட்ட மன வலிதான் அவளை அதிகம் வருத்திக் கொண்டு இருந்தது. அதை அருகே வந்த. மேரி அறிந்து விட்டாள் தாமரை முகத்தைப் பார்த்து இரவு அதிகம் அழுதாயாடி தாமரை நீ முகமே மாறி போச்சு பாரு நம்மை போன்ற ஏழைக்கு இது புதிசா தாமரை நாம ரோசம் காட்டக் கூடாது அப்புறம் கஞ்சிக்கு திண்டாட்டம் போட வேணும் நமக்கு ஒன்றும் புதிசு இல்லையே இப்படி திமிர் பிடித்த முதலாளிகளிடம் திட்டு வாங்குவது என்ன செய்வது எல்லாம் விதி தாமரை வேர்வையோடு சேர்த்து கண்ணீரையும் துடைத்து விட்டு வேலையைப் பார் என்றாள் மேரி சொல்லி முடித்ததும் பெருமூச்சு விட்டுக் கொண்டே தன் வேலையை தொடர சென்றாள் மேரி
அப்போது பார்வையாளாராக இருக்கும் கண்ணாடித் தாத்தா வந்தார் புன்னை மர நிழலில் போய் அமர்ந்தவர் வெத்தலை பையை எடுத்து வைத்து பாக்கு நறுக்க ஆரம்பித்தார் நறுக்கும் போதே உரக்க குரல் கொடுத்து ஏய் பொண்ணுங்களா ச்சும்மா மச மச என்னு இருக்காம ஒரு மெட்டு போட்டு பாடுங்க சுறு சுறுப்பா வேலை ஓடும் எனக்கும் வேகம் பிறக்கும் வாயில கொழுக்கட்டையா இன்று பாட்டை காணோம் ம்ம் பாடுங்க என்றார் கண்ணாடி தாத்தா அப்போது குமாரிதான் பதில் கொடுத்தாள் தாத்தா தாமரைதானே பாடுற நாங்க ச்சும்மா பக்க வாத்தியம் தானே அவக்கிட்ட சொல்லுங்க நீங்க சொன்னா பாடுவா ஏதோ மூடு சரியில்லை போல வந்ததில் இருந்தே உம் என்னு இருக்காள் சொல்லி முடிச்சாள் குமாரி தாமரையை ஓரக் கண்ணால் பாத்த வாறு. ஓ அப்படியா சங்கதி என்ற கண்ணாடித் தாத்தா தாமரையைப் பார்த்து ஏய் இந்தா புள்ள சத்தமா சொன்னார் பாடுமா தாமரை சிறுது நேரம் மௌனம் காத்த தாமரை பாடுறேன் தாத்தா என்றாள் எல்லோரும் இதுதான் தாமரை சொல்லுரவங்க சொல்லோனும் இல்லங்கடி என்று கேலியோடு பாடு தாமரை என்று ஊக்கம் கொடுத்தனர் தாமரை பாட ஆரம்பித்தாள் பாட்டிலே தன் கதையையும் சேர்த்தாள்



(#பாடுகிறாள் #தாமரை)

தன்னாலே தாமரை பாடுகிறாள்
தன்னானே தன்னானே போடுங்கடி (2)

கண்ணாலே நீர் கொட்ட பாடுகிறாள்
தன்னானே தன்னானே போடுங்கடி (2)

சேற்றுக்குள்ளே என் சோற்றை வைத்த
அந்த நல்லவனைத் தேடுகிறேன்
முன்னாலே முன்னாலே காணோமடி (2)

நீங்க தன்னானே தன்னானே போடுங்கடி

மாளிகையில் மலர விட்டு
மண் குடிசையிலே வாட விட்ட
அந்த உத்தமனை என்நாளும் என்நாளும் தேடுகிறேன் ஏமாற்றத்தோடு ஓடுகிறேன்

நீங்க தன்னானே தன்னானே போடுங்கடி

சேற்றோடு விளையாடும் ஐ விரல்கள்
போட்ட பொருள் எத்தனையோ
காற்றோடு கரைந்த கத அத்தனையும்
சொன்னாலும் புரியாது சுத்தமாய் தெரியாது பக்க வாத்தியம் போட வந்த கன்னியரே ச்சும்மா தன்னானே தன்னானே போடுங்கடி.

தாமரை பாடுகிறாள் தன்னானே தன்னானே போடுங்கடி தன்னானே தன்னானே போடுங்கடி . (#பாடல் #முடிவு)

பாட்டோடு பணியும் முடிந்தது காற்றோடு கலந்த கீதம் கண்ணாடித் தாத்தா மனதில் விழுந்தது கண்ணில் கண்ணீர் கசிந்தது எல்லோரும் பாடிய மகிழ்வோடு கரையேற. தாமரையோ சோகத்தை சுமந்தே கரையேறினாள் இன்னும் மனசு ஆறவில்லை கண்ணாடித் தாத்தா அருகே வந்து தாமரையின் தலையைத் தடவி கொடுத்தார் பாடலின் பொருள் புரிந்த ஓர் உயிர் அங்கே கண்ணாடித் தாத்தா மாத்திரமே தாத்தாவைப் பார்த்து புன்முறுவல் பூத்தாள் தாமரை அந்த சிரிப்புக்குள் எத்தனை ரகசியம் சிறைப்பட்டு இருக்கின்றது என்று கூடி வேலை செய்வோரில் யாருக்குத் தெரியும் அது தெரிந்த ஒரு ஜீவன் உண்டு வார்த்தைகளை தின்ற படி உலாவுது நின்று

ஒவ்வொருவராக பிரிந்து விடை பெற்றுக் கொண்டனர் இறுதியாக ஒற்றைப் பாதை வழியே கண்ணாடித் தாத்தாவும் தாமரையும் (ஏன் இந்த கண்ணாடி தாத்தா பெயர் வந்தது என்று நான் சொல்ல மறந்துட்டனே அது வேறு ஒன்றும் இல்லை தாத்தா அழகான ஆண் அழகன் தான் மான் நிறம் அவர் இரு கண்ணையும் சுற்றி கரு வளையம் பார்த்தா கண்ணாடி அணிந்தது போல் இருக்கும் அதனாலே உருவான பெயர் தான் இந்தக் கண்ணாடித் தாத்தா மற்றும் படி அவர் பெயரோ பொன்னையா இப்போ புரிகிறதா? ) சரி கதைக்கு வருவோம் சென்று கொண்டு இருந்தனர் கண்ணாடி தாத்தா கேட்டார் ஏமா தாமரை இன்னும் பிடிவாதமாக இருக்காய் உன்னைப் பற்றி பலர் அறியாமலே போய் விடுவார்களே நீ உன் அண்ணணோடு போய் சேரலாமே இறுதி காலத்தையாவது கௌரவமாக கழிக்கலாமே அம்மா உனக்கு என்ன வேண்டுதலா? இப்படி வெயிலில் காயவும் மழையில் குளிக்கவு ம் சொல்லு பார்ப்போம் என்றார் உடனே தாமரை
இடை மறித்து ஐயோ தாத்தா இப்படியெல்லாம் வேலை செய்யும் இடத்தில் வைத்துப் புலம்பிராதிங்க என்று அன்பு கலந்த எச்சரிக்கையோடு கண்டித்தாள் தாத்தா சரிடியம்மா தப்புத்தான் நான் பேசல போதுமா என்றார். எதிரே ஒரு குடிகாரன் வருகிறான் அவன் வேறு யாரும் இல்லை கண்ணாடித் தாத்தாவின் சினேகிதன் மகந்தான் பறப்பது போல் நடக்கிறான் பரதம் கற்றுக்காமலே நடிக்கிறான் அவர்களைக் கடக்கையிலே உற்று உற்று நோக்குகிறான் ஊற்றிய போதை கண்ணை மங்கலாக்கியதால் அடையாளம் கண்டுக்காமலே போகிறான் சத்தமாய் பாடுகிறான் சுத்தமாய் புரியல. வீணாப் போன பயல்க என்று சொல்லி தன் தலையிலே தாத்தா அடிச்சுக்கிறார் நாளு எட்டு நடக்கையிலே கண்ணாடி தாத்தா வீடு வந்து விட்டது சரிமா பார்த்துப் போ என்று கூறி தாமரையிடம் விடை பெற்றுக் கொண்டு செரிமிய வாறே இல்லத்துக்குள் நுழைந்தார் தாத்தா தாமரையும் சிறுது நேரம் நடந்ததும் தன் குடிசையை அடைந்து விட்டாள் அன்று தான் தாத்தா தாமரையை இறுதியாகப் பார்த்தது ஆம் தாமரை ஏதேதோ சிந்தனையுடன் உறங்கையிலே மாரடைப்பு ஏற்பட்டு தனிமையிலே துடித்து இறந்து விட்டாள். இதை அறியாத அக்கம் பக்கத்தவரும் அவளை தேடவில்லை. காலையில் எழுந்ததும் அவர் அவர் வேலைக்குச் சென்று விட்டனர் குடிசையும் அருகருகே இல்லை சுற்றியும் உள்ள அனைவருமே கூலிகள் பகல்பூரா வேலை இரவோடு இரவாக கூடு சேர்வது போல் குடிசைக்கு வருவது வரும் போதே பலர் போதையோடு வருவார்கள் இதில் யார் யாரை தேடுவது தாத்தா காலையில் வளமை போல் வயல் பக்கம் போய் புன்னை நிழலில் அமர்ந்து பாக்கை கையில் எடுத்த வாறே வரப்பு பக்கம் திரும்பினார் தாமரையைக் காணோம் உடனே ஏய் புள்ள மீனா என்று அழைத்தார் என்ன தாத்தா என மீனா கேட்க எங்கே இந்த தாமரை புள்ள என்றார் அவ வரல தாத்தா இன்று என்றாள் மீனா ஓ அப்படியா சரி நீங்க வேலையைப் பாருங்க என்று கூறிய தாத்தா யோசித்தார் நாம நேற்று அவளின் கடந்த கால வாழ்வை ஞாபகப் படுத்தியதில் ஏதும் அழுதாளோ மனசு சரியில்லை போல் சரி நாளை வரட்டும் ஓய்வு எடுத்து விட்டு என அமைதியானார் மறு நாளும் தாமரை வரவில்லை தாத்தா மனசு ஏதோ பண்ண சரி ஒரு எட்டுப் போய் பார்ப்போம் என்று அன்று நேரத்தோடு கிளம்பினார் அவர் தாமரை குடிசைக்குப் போகும் போது சுற்றி உள்ள ஒரு சிலர் வந்துள்ளனர் வேலை முடிச்சு அவர்களிடம் விசாரித்தார் அவர்கள் தெரியாது தாத்தா என்று பதில் கூறவே குடிசைக் கதவை தட்டிப் பார்த்தார் சத்தம் இல்லை கதவு ஓரமாய் பார்த்தார் அப்போது வித்தியாசமான வாடை வெளியானது கதவு உள் பக்கம் கட்டப் பட்டு இருந்தது
தாத்தாவுக்கு ஒரே பதட்டம் அருகே நின்ற பையனை அழைத்து கயிறை அறுக்கச் சொன்னார் அவன் தயங்கவே தாத்தா விடாது கட்டாயப் படுத்தினார் அவனும் வேறு வழி இன்றி அறுக்க முன் வந்தான்
அறுத்துப் பார்த்தால் தாமரையின் உயிர் அற்ற உடல் உப்பிப்போய் இருந்தது கொஞ்சம் வாடையும் வீச ஆரம்பித்தது தாத்தா வாய் விட்டு அழுதார் ஏம்மா மகாராணி உனக்கு இப்படி ஒரு இறப்பாமா வரவேண்டும் என் நெஞ்சு வெடிக்கப் பாக்குதே என்று சொல்லி அழுதார் அப்போது சத்தம் கேட்டு பலர் வந்து விட்டனர் எல்லோரைம் பார்த்து தாத்தா கோபமாய் திட்டி தீர்த்தார் இப்படியா இருப்பிங்க பூட்டிய வீட்டை தட்டி பார்க்க மாட்டீர்களா? மனிதர்களா நீங்க என்று அதற்கிடையில் யாரோ கொடுத்த தகவல் கிடைத்து காவல் துறையினர் வந்து உடலை பெற்றுக் கொண்டனர் யார் சொந்தக் காரர் என்று கேட்டதும் அனாதை புணம் ஐயா என்று பதில் கொடுத்தார்கள் கண்ணாடி தாத்தாவுக்கு தலை சுற்றி கண் இருண்டது உண்மையைக் கூறவும் முடியல. அவர்கள் சொன்னதை ஏற்கவும் முடியல. தவிப்போடும் பெரும் மனத்துடிப்போடும் தன் வீட்டை அடைந்தார் தாத்தா அன்று உணவு உறக்கம் இழந்து துடித்தார் மறு நாள் காலையிலே கூட வேலை செய்யும் பெண்களுக்கு தூது விட்டு மருத்துவமனை சென்று தாமரையின் உடலை வழி அனுப்பி வைத்தார் மனதில் ஆயிரம் ஆயிரம் கேள்விகளோடு கூடி நின்ற தாமரையின் தோழிகள் முந்தானையை முகத்தில் போட்டு அழுத படியே வழி அனுப்பி விட்டு அன்று அனைவருமே பணிக்கு விடுமுறை எடுத்துக் கொண்டனர். கண்ணாடி தாத்தா மட்டும் தொடர்ந்து 3நாள் விடுமுறை எடுத்து விட்டு நான்காம் நாள் போனார் புன்னை நிழல் உண்டு அவரிடம் புன்னகை இல்லை பணியாளர்களும் சோகத்தில் மீளவில்லை பாக்கை வெட்டி வாயில் போட்டுக் கொண்டு வரப்பு வழியே நடந்தார் வேலை செய்வோரை கவனித்த படியே அப்போது வணக்கம் என்னும் குரல் கேட்டு திரும்பி பார்த்தார் பெரிய நாட்டாமை நின்றார் பதிலுக்கு தாத்தாவும் வணக்கம் தம்பி என்று கரகரத்த குரலிலே கூறினார் கூறி முடித்ததும் தாமரை போய்ட்டா நாட்டாமை தம்பி என்றார் எங்கே என்று சிறு பதட்டத்தோடு பெரிய நாட்டாமை கேட்டார் தாத்தா சொன்னார் ஒரேயடியா போய்ட்டா என்று கூறி நடந்தவைகளை விளக்கினார் நாட்டாமை தலையில் அடித்து அழுதார் வேலை செய்தோர் அத்தனை பேரும் திகைப்புடன் பார்த்தனர் அழுத நாட்டாமையை தடவி விட்டு தாத்தா சொன்னார் அழுது என்னாகப் போகிறது கொடுத்த வாக்கை காப்பாத்திய திருத்தியோடு போய் தலை முழுகி விட்டு உன் தங்கையின் படத்தை மாட்டி பூ போடு என்றார் இதை கேட்ட ஏனையோர் தனக்குள்ளே கூறிக் கொண்டனர் தங்கையா? அப்படி என்று நாட்டாமை நடக்கவும் துணிவு இன்றி மெதுவாய் நடந்தார் நினைவுகள் மட்டும் பின் நோக்கியது. நாட்டாமை சென்றதும் எல்லோரும் தாத்தா பக்கம் வந்து கேட்டனர் என்ன தாத்தா தாமரை படத்தை நாட்டாமை மாட்டி பூ வைக்கிறதா? தங்கை என்று வேறு சொன்னீர்களே என்று.

தாத்தா எல்லோரையும் பார்த்து விட்டு தாமரையின் வாழ்க்கை ரகசியத்தை கூறி முடித்தார். தாமரை வேறு யாரும் இல்லை மா நாட்டாமையோட ஒரே தங்கை அதிர்ந்து போனார்கள் எல்லோரும் ஆமாம் அம்மா தாமரை காதலித்தவன் சாதாரணமான குடும்ப பையன் தாமரையின் காதலை நம்ம நாட்டாமையோட அப்பா அதாவது தாமரையின் பெற்றோர் ஏற்றுக் கொள்ள வில்லை தாமரை பிடிவாதமாய் அவனையே கட்டப் போவதாய் கூறி விட்டாள் கோபத்தில் அவளின் பெற்றோர் சொத்து உறவு அத்தனையும் உமக்கு இல்லை என்று கூறி உரிமை கொண்டாட மாட்டேன் என்று கை ஒப்பம் வாங்கி விட்டு தாமரையை வீட்டை விட்டு போகச் சொல்லி விரட்டி விட்டனர் போலிக் கௌரவம் பார்த்து தாங்கள் பெற்ற ஒரே பெண் குழந்தையின் உறவையே முறித்துக் கொண்டனர் போதாக்குறைக்கு தாமரையின் அண்ணன் அதுதான் அம்மா நம்ம நாட்டாமையிடமும் சத்தியம் பெற்று விட்டனர் தங்கள் மறைவுக்குப் பின்னும் தாமரையை சேர்த்துக் கொள்ள கூடாது என்று சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று அண்ணனும் கொடுத்த வாக்கை மீறக் கூடாது என்று தங்கையும் பிடிவாதமாக இருந்தார்கள் ஆனால் இரத்தம் துடிக்காமலா இருக்கும் பாசப் பறவைகள் சிறு வயதில் இருவரும் தாய் தந்தை விரட்டியதும் தாமரை தன் காதலனிடம் சென்று விட்டாள் பின்னர் தாமரை பற்றி தகவலே இல்லை இரண்டு ஆண்டு இடைவேளை ஆச்சு மீண்டும் அவளைச் சந்திக்கும் போது அப்போது தாமரை பெற்றோர் இறந்து விட்டனர் அறிந்ததும் அழுது புலம்பினாள் அவளின் தோற்றம் ஏழ்மை வாழ்வைக் காட்டியது நானும் நாட்டாமை தம்பியும் தான் போய் இருந்தோம் ஓர் வேலையாக. நான் தான் தாமரையிடம் அவளின் குடும்ப வாழ்வை பற்றி விசாரித்தேன் பாவம் மரத்தால் விழுந்தவனை மாடு குத்திய கதை போல் தாமரை வாழ்க்கையும் ஆச்சு தாமரையின் சொத்து கிடைக்காது என்று தெரிந்ததுமே மாமியார் தாமரையை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார் இருவருமே ஒதுக்கப்பட்டார்கள் கணவனும் எதிர் பாராத விபத்தில் மரணமடைந்து விட்டான்
இப்படி பல துன்பப் பட்டுத்தான் இறுதியாக. யாரோ போல் இங்கே வந்து சேர்ந்தாள் விரட்ட மனம் இல்லாத நாட்டாமை சக பணியாளர்களைப் போல் நடத்தினார் அவளும் அதையே ஏற்றுக் கொண்டாள் தன்னைப் பற்றி யாரிடமும் இது வரை அவள் மூச்சே விட்டதில்லை
அவள் வெறும் தாமரை இல்லை அம்மா சேற்றில் வாழ்ந்த செந்தாமரைக் கொடி சுற்றி உள்ள அத்தனை சொத்துக்கும் சொந்தக் காரி அவள் தான் அம்மா என்று கூறி முடித்தார் தாத்தா வாயடைத்து நின்றனர் அத்தனை பேரும் இனி தாமரை நாதம் வாயோடு உலாவும் நாத்தோடு மோதும்

முற்றும் #நன்றி

எழுத்துப் பிழை சுட்டிக் காட்டவும் 😊

எழுதியவர் : ஆர் எஸ் கலா (12-Oct-22, 3:17 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 139

மேலே