குடைக்கு ஒரு கவிதை

*குடை* க்கு ஒரு கவிதை எழுதி இருக்கிறேன் அதில் ஏதேனும் *குறை இருந்தால் சொல்லுங்கள் நண்பர்களே.....*



☔☔☔☔☔☔☔☔☔☔☔

*குடை ஒரு கொடை*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

☔☔☔☔☔☔☔☔☔☔☔

#குடை

பல வண்ணத்தை
பணக்காரன் வாழ்க்கைக்கு
குறியீடாகவும்...
கருப்பு வண்ணத்தை
ஏழை வாழ்க்கைக்கு
குறியீடாகவும் வைத்து
எந்த கவிஞன்
எழுதினான்
இந்தக் குடை கவிதையை..?

பணக்காரன்
வெயிலுக்குப் பிடிக்கும்
குடையோ சிரித்துக்கொண்டு....
ஏழைகள்
மழைக்கு பிடிக்கும் குடையோ!
ஒழுதுக்கொண்டு....

பிள்ளை பருவத்தில்
இதைப் பிடித்துக் கொண்டு
மழையில் நடந்தாலும்
ஏனோ மழையில்
நனையும் மனம்.....
இப்போதும்
மழையும் குடையும் இல்லாமலே
மனம் நனைகிறது
அந்த நினைவுகளால்....!!

மழை காற்றுக்கு
கொஞ்சம் குறும்பு
அதிகம் தான்....
குடை பிடித்து வருபவர்களின்
குடையை உடைத்து
மழையில்
நனைய வைத்து ரசிக்கின்றதே!

இதை மடித்து
வைப்பதாகச் சொல்லி
உடைத்து வைத்தவர்களே
அதிகம்.....!!

மயிலின் குளிருக்கு போர்வையளித்த
பேகன் போல்.....
மனிதனின் மழைக்கு
போர்வை அளிக்கும்
இது என்ன
பேகன் வாரிசுகளோ....?

நான் நனைந்தாலும்
தன்னை நம்பி
வந்தவர்களை
நனையாமல்
பார்த்துக் கொள்கிறதே!
யார் இதற்கு
கற்றுக் கொடுத்தது
தமிழ்நாட்டின் பண்பாட்டை..?

மழைநீரில்
நனையாமல் இருக்க
குடை பிடித்து வந்தாலும்...
இந்தக் குடையோ!
சிறுவயதில்
மழையில்
நனையாமல் இருக்க....
தாய்
முந்தாணைப் பிடித்துவந்ததை
நினைவுபடுத்தி
நனைய வைத்து விடுகிறது
கண்ணீரீல்......!!!

தேவையென்றால்
தேடுவார்கள்...
அதன் ஆடை கிழிந்தாலும்...
உடல் பழுதடைந்தாலும்....
பராமரிக்க மட்டும்
யாரும் முன் வர மாட்டார்கள்....
ஏழைக்கும்
குடைக்கும் என்ன ஒரு
ஒற்றுமை....!
இரட்டுற மொழி
கவிதையே எழுதலாம்
போலிருக்கிறது.......!!!

*கவிதை ரசிகன் குமரேசன்*

☔☔☔☔☔☔☔☔☔☔☔

எழுதியவர் : கவிதை ரசிகன் (16-Oct-22, 8:12 pm)
பார்வை : 99

மேலே