ஏய்க்குமந்த கும்பல் செயலென்று நிற்குமோ

செந்துறை


தமிழை வளர்த்த கவிப்புலவ ரையும் ஒழித்து
தமிழ்வாய்ச் சவடால் கசடர் வளர்ந்தார்.

அவருக்கு பெரியார் அவைத்தலைவ ராகி
அவரேத் தமிழை அழித்தமுதல் வஞ்சகன்

அண்ணாப் பெரியாரின் கைக்கூலி சேர்ந்து
கன்னாபின் னாவென்று அச்சமிலா ஏசினன்

அண்ணா ஒருவருட ஆட்சியில் என்னகண்டார்
ஒன்றையும் சாதிக்கா போனார் அமெரிக்கா

அடுத்துநாற்கா லிக்கு கருணா நிதியாம்
கொடுத்து சனத்தை கெடுத்தாரே சாராயம்

எங்குத் திரும்பினும் எந்தை சிலைவைத்தார்
எங்குமண்ணா பேரை எதற்குமே சூட்டினார்

சாதியின மெல்லாம் கலநதுத் தமிழழித்தார்
போதி மரப்புத்தர் போல நடிக்கின்றார்

ஏய்க்குமந்த கும்பல் செயலென்று நிற்குமோ



....

எழுதியவர் : பழனி ராஜன் (16-Oct-22, 7:12 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 45

மேலே