நிழலாக உன் நினைவுகள் என்னுடன் 555

***நிழலாக உன் நினைவுகள் என்னுடன் 555 ***


ப்ரியமானவளே...


மழைமேகம் உருகினால்
பூமியெங்கும் நீர் துளிகள்...

உன் காதல்
என்னை விலகியதால்...

என் விழிகள் எங்கும்
கண்ணீர் துளிகள்...

எல்லாம் மறக்க நினைக்கிறேன்
காதல் நினைவுகளை தவிர...

என்மீதானஉன் காதல்
நிஜமா நிழலை தெரியவில்லையடி...

உன்மீதான என்
காதல் நிலையானதடி...

நிஜத்தில் நீ என்னோடு
இல்லாமல் இருக்கலாம்...

நிழலாக உன் நி
னைவுகள்
என்னோடு எந்நேரமும் இருக்குதடி...

காயம் பட்டும் தெரியவில்லையடி
என் மனதுக்கு...

மீண்டும் மீண்டும் உன்னை
நினைத்து ஏக்கத்தில் வாடுகிறது...

என்னை புரிந்துகொள்ள
முடியாதவள் நீ...

உன் விருப்பமின்றி
உன்னை நான் சேரமுடியாது...

கடல்கூட சிறிது

நே
ரம் உறங்கும் என்பார்கள் ...

உன் நினைவுகளோ
உறங்கவில்லையடி என்னில்...

உன் நினைவும் நானும்
ஒன்றாக உறங்குவோம்...

அன்று வந்து பார் முடிந்தால்
ன் நினைவிருந்தால் உனக்கு.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (18-Oct-22, 9:50 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 450

மேலே