காதல் பரிசு
நீ என்னை விட்டு
விலகி செல்ல செல்ல
உந்தன் நிழல்
என்னருகே
நெருங்கி வந்து
மறக்க முடியாத
நினைவுகளாக
எந்தன் நெஞ்சில்
தங்கி விட்டதே...!!
காதலில் தோற்ற எனக்கும்
"காதல் பரிசாக"
உந்தன் நினைவுகளை
பெரும் தன்மையாக
கொடுத்து செல்கிறாய்...!!
--கோவை சுபா