உன்னையே நான் காதலிக்கிறேன் 555
![](https://eluthu.com/images/loading.gif)
***உன்னையே நான் காதலிக்கிறேன் 555 ***
நினைவானவளே...
ஓடி விளையாண்ட
சிறு வயதில்...
நான் செல்லும் இடமெல்லாம்
நிலவும் என்னுடன் வந்தது...
இன்றும் நிலவை
ரசிக்கிறேன் அன்று போலவே...
நடக்கும் போதெல்லாம்
என் தோல் சாய்ந்து...
கரம் கோர்த்து
நடந்தவள் நீ...
இன்றுபோல் என்றும்
உன்னுடன் வருவேன்...
உன்னை ப்ரியமாட்டேன்
என் உயிர் நீதானடா என்றாய்...
என் உயிரில்பாதி
நீயாக வாழ்ந்தாய் என்னில்...
உடலைவிட்டு உயிர் எப்போது
பிரியுமென்று யாருக்கு தெரியும்...
உயிராக வாழ்ந்தவள் நீ
சொல்லாமலே பிரிந்தது ஏனோ...
புரிந்துகொண்டால் கோபமும்
அர்த்தமுள்ளது என்கிறார்கள்...
உன் கோபம்
என்னவென்று தெரியவில்லையே...
நான் உன்னை
புரிந்துகொள்வதர்க்கு...
அன்று ரசித்த நிலவை
நான் இன்னும் மறக்கவில்லை...
உயிரில் பாதியாக
வாழ்ந்த உன்னை...
நான்
எப்படி மறப்பேன்...
காதலிக்கிறேன் மீண்டும்
உன்னையே நான்.....
***முதல்பூ.பெ.மணி.....***