கண்ணிலே காதலேந்தி நீ நடந்தாய்
வண்ணங்களின் நீலத்தில்
விழிகள் அசைய
வெண்மை வண்ணத்தில்
புன்னகை மின்ன
வெண்ணிலா வானில்
நாணத்தில் நடக்க
கண்ணிலே காதலேந்தி
நீ நடந்தாய்
...............................................................................................................பயில்வோர்க்கு மட்டும் :--
.....யாப்பின் வடிவங்களுக்கு வாய்ப்புத் தரும்
இயல்புப்பா . பயில்வோர் முயலாம்
வண்ணநீ லத்தில் விழிகள் அசைந்திட
நேர் நிரை நேர் நேர் நிரைநேர் நிரை நிரை
கூவிளம் தேமா தேமா கருவிளம்
..விளம்முன் நேர் மாமுன் நிரை மாமுன் நிரை
தளை தட்டா வெண்பா விதிக்கு கட்டுப்படுகிறது
கண்ணிலே காதலேந்தி நீ என்று ஈற்றடியை
அமைத்து இடை வரிகளை வெண்பா அடிகளாய்
அமைத்து முயலவும்

