வள்ளலாரின் சிவநேச வெண்பா 1
திரு அருட்பா, திருவருட்பிரகாச வள்ளலார்
சிவநேச வெண்பா,
இரண்டாம் தொகுதி, மூன்றாம் திருமுறை
காப்பு
நேரிசை வெண்பா
முன்னவனே யானை முகத்தவனே முத்திநலம்
சொன்னவனே தூய்மெய்ச் சுகத்தவனே - என்னவனே
சிற்பரனே ஐங்கரனே செஞ்சடையஞ் சேகரனே
தற்பரனே நின்தாள் சரண். 1