மரம் வைத்தவன்

இலாவணி

அந்தசிவ னுமைத்தானே அர்தநாரி உருகாட்டி
விந்தையெனப் பிறையிந்து சூட்டி சூட்டி

வந்தவரின் வுயிருக்கும் வானவர்க்கும் தெய்வமடா
விந்தைய றியாப்போனார் கெட்டு கெட்டு

நேரிசை வெண்பாக்கள்


எதிர்பார்த்து மிவ்வுலகும் ஏங்குதடா சீவன்
கதிரவனை நோக்கியேக் காத்து -- முதிர
எதிர்பார்த் துயிர்களும் ஏங்குமெந் தைசெய்
யதிசயத்தை யேற்று மது


மரம்வைத் தவன்தண்ணீர் மட்டுமூற் றானோ
சிரமம் கடவுளேற்று செய்யான் --- பரவ
மரத்தின் விதையினை மண்ணில்நட் டாரே
இரங்கியூற் றக்காண்தண் ணீர்

நேரிசை ஆசிரியப்பாக்கள்

பையில் மண்ணின் உள்ளே இருக்க
தாயின் ஊட்டம் மண்ணுடை வளமும்
காத்திடும் கருவை அதுபுது உயிருடை
எதிர்பார்ப்பு விதை பாறையில் விழச்சாம்
தாயவள் உணவிலா திருக்க உள்ளே
கருவதும் நிலைக்காபார் கழன்று
வீழுமாம் வெளியே கடவுளும் அருளாரே

பயிரிட வளர்கவோர் மனிதன் எதையும்
உற்பத்தி செய்ய வேண்டுமாம் உதவி
எதையும் யாரையும் எதிர்பார்க்கா
ஒன்றுமே நடவா திந்த உலகத்திலே

மரத்தை வைத்தவன் வளரநீர் பொழிவனாம்
சிரசில் வையது கடவுள் அல்ல
நரமனித ரினைக்குறித்து விளக்க வந்த
சொல்லாகும் தவறாய் கொள்ளவும்
தவறாய் சோம்பியு மிருப்பர் பாரே


உயிர்கள் வாழ வழிவைத்த இறைவன் ஊடடி விடான். ...தானோ அல்லது
பிறரைத் கொண்டேதான் உயிர்கள் வாழுகின்றன வளர்கின்றன. ...தனக்கு
வேண்டியதை படைத்தவன் கடவுள் வளர பிறக்க வாழ செழிக்க தானும்
பெற்றவரும் குலமும் அரசும் மற்ற பிறரும் உதவ தெரிந்திருக்க வேண்டும்.
கடவுள் விட்ட வழி என்பவன் சோம்பேறி.......


.......

எழுதியவர் : பழனி ராஜன் (25-Oct-22, 12:15 pm)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : maram vaiththavan
பார்வை : 23

மேலே