ஞான நதி தீரத்திலே அகத்தியர் போதனை

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே
---இந்த ஞானப் பாடல் எளிமையானது மனம் செம்மையைப் பட்டுவிட்டால்
மந்திரங்கள் செபித்திடவேண்டாம் மூச்சை அடக்கி காற்றை நிறுத்தி
கடுந் தவங்கள் செய்திட வேண்டாம் . மனதை அடக்கு செம்மைப் படுத்து
இதில் முதலடியில் சொன்னது ஈற்றடியில் முரண் போல் தோன்றுகிறது
அகத்தியர் சொல்வதென்ன . யோசிக்கவும்
யாப்படையாளம் : பிற அடிகள் அளவடியாகி ஈற்றடி ஒருசீர் குறைந்த
வெண்டுறை பாவினம் எனலாம்
ஒருவன் என்றே தெய்வத்தை வணங்க வேணும்
உத்தமனாய் பூமிதனில் இருக்க வேணும்
பருவமதில் சேறுபயிர் செய்ய வேணும்
பாழிலே மனத்தை விடான் பரம ஞானி
திரிவார்கள் திருடரப்பா கோடா கோடி
தேசத்தில் கள்ளரப்பா கோடா கோடி
வருவார்கள் அப்பனே அநேகம் கோடி
வார்த்தையினால் பசப்புவார் திருடர் தானே
----இப்பாடலில் அறிவுரைகளை வழங்குகிறார்
தலையாய அறிவுரை முதலடியில் வரும்
ஒருவன் என்றே தெய்வத்தை வணங்க வேணும்
யாப்படையாளம் ஆசிரிய விருத்தமெனலாம்
மேலும் பார்ப்போம்