கொடுத்து வைத்தவன்

இரண்டு நாள் அலுவலக வேலையாக அவசரமாக சென்னை வந்திருந்தான் கவுதம். அதை முடித்தே ஆகவேண்டும்
எப்பாடுபட்டாவது...

செல்போன் சிலிர்த்தது...
அட ..பிரபாகர் லைனில்..அவனது ஆருயிர் நண்பன்...திட்டப்போறான்..
சொல்லாமல் வந்திட்டேன்..

ஹலோ பிரபாகர்..ஆரம்பிக்கும்போது
மறுமுனையில்...அவன் மனைவி
யமுனாவின் குரல்....அண்ணா அவருக்கு...பைக் ஆக்ஸிடென்ட் ஆகி ...பலத்த காயம்
உடைந்து போனவளாய் அழுதாள். ஹாஸ்பிட்ல அட்மிட்
பண்ணியிருக்கோம்...
இமிடியட்டா மேஜர் ஆபரேசன்
காலில் பண்ணனுமாம். பிலீடிங்
ஓவர்... தழுதழுத்தாள்...கான்சியஸ்
வரலை. செல் கட்டாகியது.
ஸ்தபித்துப் போனான் கவுதம்.

டாக்டர் ஐசியூவை விட்டு வெளியே வந்தார்..
இதோ பாரும்மா... இன்னும் ஒரு மணி நேரத்தில ஆபரேசன்..
ஒரு செவன்டி தவுசன் உடனே கட்டுங்க..
பிலீடிங் நிக்கல.. உயிருக்கு ஆபத்தாயிடும்....சொல்லிக்கொண்டே டாக்டர் அறைக்குச் சென்றுவிட்டார்.

யமுனாவிற்கு என்ன செய்வது என்று தெரியல..அம்மா வீடும்
நடுத்தர குடும்பம்தான்..

யமுனா யோசிச்சவளாய் தன்
தம்பியிடம் ..பிரபாகர்! ஏடிஎம் பின்னை
சொல்லி ஏதும் பணம் இருக்காவென
பார்க்க அனுப்பி காத்திருந்தாள்..

பத்து நிமிடத்தில் திரும்பி வந்தவனை ஆர்வமாக யமுனா
நோக்கினாள்... என்ன என்பது போல்..

அக்கா...அக்கவுண்ட்ல ஒரு இலட்சம்
இருக்குக்கா...

கேட்டதும் யமுனா...நல்ல வேளை..
புது வீட்டிற்கு அட்வான்ஸ் கொடுக்க
அப்பாக்கிட்ட கடன் கேட்டிருந்தேன்.
இன்னைக்கு போட்டிருக்காங்க..

ஆப்ரேசன் முடிந்ததும் கண் விழித்த
பிரபாகர் யாரையோ தேடினான்..
கவுதம்.....வந்தானா?

ஆமாம்..உங்க கவுதம் போன் பண்ணியும் வந்து பார்க்கலே...
வந்தா உதவி கேட்பமோன்னு
பயம்.
என்ன பிரண்டோ..இந்தக்காலத்தில
நல்லா இருந்தாத்தான் எல்லாம்..

யாரெல்லாமோ வந்து பார்த்திட்டு
விசாரிச்சிட்டு போறாங்க..
சற்று கோபமானாள்..

நிறுத்து யமுனா..என் நண்பனைப்பற்றி எனக்கு நல்லாவே
தெரியும்..ஏதோ இக்கட்டான
வேலையில் இருந்திருப்பான்..

அது சரி... ஆபரேசனுக்கு பணம் ஏது?

உங்க அக்கவுண்ட்ல இருந்ததுங்க
ஒரு லட்சம்..
ஒரு லட்சமா..
ஆமாங்க...வீடு அட்வான்ஸ் கட்ட
அப்பாகிட்டே கேட்டோம்ல அவங்க
அனுப்பியிருக்காங்க..
மலர்ச்சியா சொன்னாள்..
புரிந்தது பிரபாகருக்கு..ஏன்னா
இரண்டு நாளைக்கு முன் தான்
அவன் மாமனார் போன் பண்ணி
பண புரட்டமுடியலைனு வருத்தப்பட்டுச் சொன்னார்..

அந்தப்பணம் எப்படினா..யமுனா...
உணர்ச்சிவசப்பட்டு பிரபாகர் சொல்ல
எத்தனிக்கும்போது ...

கவுதம் அறைக்குள் நுழைந்தான்..
பிரபாகரைப் பார்த்ததும் கண்களில்
நீர் ததும்பியது..

கவுதம்...உனக்கு எப்படி நன்றி
சொல்றதுனு தெரியலடா..

யமுனா கோபத்துடன் கணவனை
ஏறிட்டாள்.

நீ மட்டும் அந்தப் பணத்..

வாயைப் பொத்தினான் கவுதம்..

நிறுத்துடா..இது கூட இல்லைனா
அப்புறம் என்னடா பிரண்ட்ஷிப்...

யமுனாவிற்கு புரிந்து விட்டது..
அப்ப அந்த பணம் அப்பா அனுப்பலையாங்க..
ஊகூம் ..தலையாட்டினான் தன்
மனைவியை நோக்கி..

அண்ணா என்னை மன்னிச்சுடுங்க..
உங்களோட புனிதமான நட்பை
தவறா புரிஞ்சுகிட்டேன்..
கண்ணீர் விட்டாள்..

அழாதே யமுனா...

பிரபாகர் தன் நண்பனை பெருமிதத்தோடு பார்த்தான்..

எழுதியவர் : ரவிராஜன் (29-Oct-22, 10:16 pm)
சேர்த்தது : ரவிராஜன்
பார்வை : 364

மேலே