உனக்காக வாழ்வேன் மரணிக்கும்வரை 555

***உனக்காக வாழ்வேன் மரணிக்கும்வரை 555 ***


ப்ரியமானவளே...


வெயில் காலத்தில் உன்
கைக்குட்டையால் குடை பிடித்தாய்...

பனி
யில்
நனையும் போது...

என் கரம் கோர்த்து
கதகதப்பு கொடுத்தாய்...

காட்டாறை கடக்கும் போது
இருக்க அனைத்துக்
கொண்டாய்...

கடந்த காலம் எல்லாம்
மறந்துவிட்டாயா அன்பே...

உன் விழிகளை என் விழிகள்
மையம் கொண்டு பேசுகையில்...

ஏனடி முந்திக்கொள்கிறது உன்
விழிகளில் கண்ணீர்த்துளிகள்...

என்
இதயத்தை
புரிந்துகொண்ட நீயே...

நித்தம் என்னை
வதைப்பது ஏனடி...

காதலை தந்
தாய் கூடவே
கனவுகளையும் கொடுத்துவிட்டாய்...

பிறந்தபோது தெரியாது
உனக்காக பிறந்தேனா என்று...

உன்னை கண்ட
பிறகு உணர்ந்தேன்...

உன்னோடு
வாழவில்லை என்றாலும்...

உனக்காக நான்
வாழவேண்டும் என்று.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (31-Oct-22, 4:33 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 501

மேலே