நினைவுகளே கலைந்து செல்லாதீர்கள் 555

***நினைவுகளே கலைந்து செல்லாதீர்கள் 555 ***
நினைவானவளே...
உன்மீதான என் அன்பை
நீ உணரப்போவதுமில்லை...
என்னை முழுமையாக
புரிந்து கொள்ளப்போவதுமில்லை...
உணர்வுகளே இல்லாத
உன்னிடத்தில்...
உயிராக இருந்தது
என் தவறோ தெரியவில்லை...
வெட்டப்பட்ட தேக்குமரம்
துளிர்த்தாலும் வளருவதில்லை...
உன் நினைவுகளையும்
அப்படிதான் நினைத்தேன்...
ஆலமர விழுது போல
அங்கு அங்கு சில நினைவுகள்...
உன்னை
நினைவுபடுத்திக்கொண்டே செல்லுதடி...
நான் தேவையில்லை
என்று சொல்லிவிட்டாய்...
என் மனமோ நீ மட்டுமே
தேவையென சொல்லுதடி...
எனக்கு குடை பிடிக்க
மீண்டும் உன் நிழல் வேண்டும்...
நொடிக்கு நொடி
உன்னை நினைவு படுத்தும்...
உன்
நினைவுகளிடம் கேட்கிறேன்...
நினைவுகளே நீங்களும் என்னைவிட்டு
பிரிந்து செல்லாதீர்கள் என்றே.....
***முதல்பூ.பெ.மணி.....***