என்னுள் ஒரு சாளரம்

இரவு பௌர்ணமியில்
தேய்கிறது என் மனம்
என்னுள் ஒரு சாளரம்
எப்போது திறக்கும்
உன் ஒற்றைச்சொல்லில்
அது திறக்கும்
சொல்லோடு சிறு புன்னகை
அது தனி கிறக்கம்
தனிமை நீங்கி
உன் விரல்கள் பற்ற விருப்பம்
காதல் கனவு நீங்கி
காட்சி நிலைக்க
ஆழ்விருப்பம்………..

எழுதியவர் : பேய்க்கரும்பன்கோட்டை அகி (3-Nov-22, 3:02 pm)
சேர்த்தது : Akilan
பார்வை : 96

மேலே