வீட்டுலகு அடைய வேண்டுவோர் இயல்பு – அறநெறிச்சாரம் 190

நேரிசை வெண்பா

இந்தியக் குஞ்சரத்தை ஞான இருங்கயிற்றால்
சிந்தனைத் தூண்பூட்டிச் சேர்த்தியே - பந்திப்பர்
இம்மைப் புகழும் இனிச்செல் கதிப்பயனும்
தம்மைத் தலைப்படுத்து வார் 190

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

இம்மையிற் புகழையும் மறுமையில் வீடுபேற்றையும் தவறாமலடையக் கருதுகின்றவர்கள் இந்திரியங்களாகிய யானைகளை உள்ளமாகிய தூணிடைச் சேர்த்து (விலகாவகை) ஞானமென்னும் வலிய கயிற்றால் இறுகக் கட்டுவர்.

குறிப்பு:

இந்தியம் - இந்திரியம், இந்தியம், ஞானம், சிந்தனை மூன்றும் முறையே குஞ்சரம், கயிறு, தூண்களாக உருவகிக்கப்பட்டுள்ளது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Nov-22, 9:01 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 35

புதிய படைப்புகள்

மேலே