ஞான நூல்களின் ஆராய்ச்சி எப்பொழுதும் வேண்டும் – அறநெறிச்சாரம் 189

நேரிசை வெண்பா

கெடுக்கப் படுவது தீக்கருமம் நாளும்;
கொடுக்கப் படுவ(து) அருளே! – அடுத்தடுத்(து)
உண்ணப் படுவது நன்ஞானம்; எப்பொழுதும்
எண்ணப் படுவது வீடு 189

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

எக்காலத்தும் அழிக்கப்படு வது தீவினையே; பிறர் பால் செய்தற்குரியது அருளே; பலமுறையும் ஆராய்ந்து இன்புறுதற் குரியது நல்ல ஞான நூலே; எஞ்ஞான்றும் மனத்தால் நினைக்கப்படுவது வீடு பேறே கும்.

குறிப்பு: வீடு - விடப்படுவது:

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Nov-22, 8:54 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 54

மேலே