மனதின் குரல்
*மனதின் குரல்*
குத்தும் ஊசி
கிழிசலை தைக்கும்
வெட்டும் கத்தரிக்கோல்
ஆடையை
வடிவமைக்கும்
செதுக்கும் உளி
கல்லை சிற்பமாக்கும்
காயம் பட்ட மனதிடம்
சொன்னேன்
காயங்களை ஏற்றுக் கொள்
என்று.
நோக்கம் சரி எனில்
காயமும் இனிதாகும்
நோக்கம் தவறெனில்
அன்பும் கசந்து போகும்
கற்றுக் கொள் என்றது மனம்
- கமலநாதன்