Kamalanathan S - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Kamalanathan S
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  02-Nov-2022
பார்த்தவர்கள்:  143
புள்ளி:  10

என் படைப்புகள்
Kamalanathan S செய்திகள்
Kamalanathan S - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Dec-2022 10:59 am

*ஆழிப் பேரலை*

அன்றும்
என்றும் போல் தான்
விடிந்தது

கடற்கரையில்
எப்போதும் போல்
நடைப்பயிற்சி

வலைகளைப்
பிரித்தபடி
கடலுக்குள் செல்ல
ஆயத்தமான
மீனவ மக்கள்

மணலில் துள்ளி
விளையாடிக்
கொண்டிருந்த
சின்னஞ் சிறார்கள்

எவரும்
அறிந்திருக்கவில்லை
இன்னும் சில
நிமிடங்களில்
அப்படியொரு
கோரம் நடக்குமென்று

செய்தித் தாள்களில்
இந்தோனேசியாவில்
நில நடுக்கம்

ஒரு ஓரமாக
இடம் பெற்று
பதிவாகிக் கொண்டிருந்த
நேரம்

திடீரென்று எழுந்தது
அலையின் பிரவாகம்

அள்ளிச் சென்றது
மனித உயிர்களை

அதுவரை அழகு
காட்டிக் கொண்டிருந்த
கடற்கரை விடுதிகள்
ஒரு நொடியில்
இல்லாமற் போயின

பதிவாகிக்

மேலும்

Kamalanathan S - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Dec-2022 5:47 am

*பெரியார்*

அடுக்கு மொழி இல்லை
அழகு நடை இல்லை
அடிக்கடி இடையே
வரும் வார்த்தையும் கூட
*வெங்காயம்*
என்பது தான்.

ஆனாலும்
உன் பேச்சின் அக்னியில்
இன்றும் தகிக்கிறது
எம் மண்ணும்
எம் சிந்தையும்.

படி தாண்டக் கூடாதென
முடக்கப்பட்ட பெண்களை
படி தாண்டி
படித்திட வா என்றாய்.

பணி செய்திடு
என்றாய்.
பணிக்கேற்ற
உடை உடுத்திடு
என்றாய்.

சிறு பிராயத்
திருமணம் கூடாதென்றாய்.

கைம் பெண்ணுக்கு
மறு வாழ்வு
உண்டென்றாய்.

பெண்ணடிமை
நீங்கிட
உனைப் போல்
குரல் கொடுத்த
இன்னொரு தலைவரில்லை.

அடிமைத் தனம்
கூடாதென்றாய்.

ஆண்டவனே
இல்லையென்றாய்.

ஆனாலும்
அவனை வழிபடும் உரிமை
அனைவருக்

மேலும்

Kamalanathan S - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Nov-2022 8:32 pm

குடை எடுத்துச்
சென்றேன்.
விரிக்கவில்லை.
நனைந்தே வந்தேன்.

மழையின் தழுவலில்
நீ இருந்தாய்.....

மேலும்

Kamalanathan S - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Nov-2022 10:36 am

" *சாமி வந்தது*

அவளுக்கு
சாமி வந்தது

*அடேய்* என்றாள்.
அவள் கணவன்
ஓடி வந்தாள்

*அடியேய்* என்றாள்
அவள் மாமியார்
ஓடி வந்தாள்.

சாமிக்கு
அது பிடித்திருந்தது.

ஆனால்
*அம்மா* என்றழைத்து
அவள் பிள்ளை
வந்த போது
வா சாமி என்றணைத்தது
கண்ணீரோடு......

மேலும்

Kamalanathan S - மகிழினி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Dec-2014 12:51 pm

என் பெயர் நித்யா !
அட வித்யா சத்யா மகி
சகி என எதுவாகவும்
என் பெயர் இருந்தால் என்ன ?

தத்தித் தத்தித் தவழும்
வயதில் என் கால்களை
தொட முயலும் கைகளை
நான் ஒரு போதும்
ரசிக்க முற்பட்டதில்லை !

பள்ளி செல்லும் வழியில்
சீருடை தாண்டி தீண்டும்
பார்வைகளுக்காக என்
தலையில் "நான் சீதை"
என்று விளம்பர படம்
ஒட்டிக்கொண்டு தினமும்
நடக்க இயலாது !

உன்னோடு வைத்துக்கொண்டு
வீடு வரமால் பள்ளி முழுக்க
டம்மாரம் அடித்துக்கொண்டு
வந்துருக்கியே சனியனே
என்று பள்ளியில் வயதுக்கு
வந்த மகளை திட்டும் அம்மாவின்
கோபம் நியாயம் தானா ?

யோசித்து சொல்கிறேன் !

தோழன் என்று சொல்லி
தோ

மேலும்

கனல் தெறிக்கும் கவிதை. விற்பனைக்கு மாதவிகள் கண்ணகியிடம் ஏன் கற்பழிப்பு? சமூகத்தின் அவலத்திற்கு சவுக்கடி தரும் வரிகள் வலியும் கோபமும் கவிதை முழுவதும் நன்று. பாராட்டுகள் 09-Nov-2022 6:32 pm
ஆழமான கரணம், இதுவாக தன இருக்க முடியும். உண்மை 01-Sep-2019 4:50 pm
சமூக மாற்றம் பெண்கள் கையில் மட்டுமே. உயிர், உடல், உணர்வை கொடுப்பவள் நீதானே... ஆதியும் நீ, அந்தமும் நீ... ஆடவன் வெறும் பொம்மை மட்டுமே. 01-Sep-2019 4:48 pm
அர்த்தமுள்ள கோவம்... தீர்வுதான் என்ன??? 01-Sep-2019 4:44 pm
Kamalanathan S - Kamalanathan S அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Nov-2022 7:51 am

கண்ணீரின் வழியே

அந்த மின் மயானத்தின்
கதவுகள்
அப்போது தான்
திறக்கப்பட்டன.

அம்மாவின் உடலருகே
அமைதியாக
நின்றிருந்தாள்
அவள்.

பெண்கள் மயானம்
வரக் கூடாதென்று அங்கே
எவரும் கூறுவதில்லை.

அக்னியில் செலுத்து முன்
கற்பூரம் ஏற்றுக
என்றார்
அங்கிருந்த ஊழியர்.

அவள் ஏற்றிய
கற்பூரத்தோடு
அம்மாவின் உடல்
அக்னியில் புக

அங்கே மட்டும்
அமைதியாய்
அரங்கேறிக்
கொண்டிருந்தது
பெண் சமத்துவம்......

- கமலநாதன்

மேலும்

Kamalanathan S - Kamalanathan S அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Nov-2022 6:28 am

*காதல்*

நான்
எழுதிய சொற்களில்
உன்னைத் தேடினேன்

நீயோ
இன்னும் எழுதாத
சொற்களில்
மறைந்திருந்தாய்.....

- கமலநாதன்

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே