இறைவன் எங்குள்ளான்

இறைவன் எங்குள்ளான் என்று வினவினான்
'பறைதருவான்' அவன் கூப்பிடும் தூரத்தில்
உள்ளான் ஒருமுறை நெஞ்சார தொழுது
கூப்பிட்டுப் பார் உன்குரல் அவனுக்கும்
கேட்கும் உன்தேவைக்கு அவன் சேவை
சாதிப்பான் நல்ல பக்தனுக்கு சேவகனாய்
என்றேன் அவன் கூப்பிட்டானா தெரியாது
குதிரைக்கு புல்லைக் காட்ட முடியும்
மேய்வது அதன் வேலை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (5-Nov-22, 9:28 am)
பார்வை : 324

மேலே