நல்ல மனம்
பஃறொடை வெண்பா
பித்தனும் எத்தனும் பேய்குணம் கொண்டார்பின்
சத்தியம் பார்க்க சடங்கெனத் தள்ளுவன்
புத்தன்சொன் னாலும் புரியான் தகைசால்
மனிதரின் புத்தி மனமென்றும் ஏற்கான்
புனிதனாக மொத்தவித்தை புத்தியுண்டு பாவிக்கு
ஆறறிவு முண்டு அதைப்பயன் செய்யாது
ஆற்றல் கொடுமையது அத்தனையும் செய்வனிவன்
நன்னெ றியுடனும் நல்லறம் வள்ளுவன்
என்ன பலரும் எடுத்துரைத்தும் காதுகொள்ளார்
வேண்டாமே புத்திசொலல் வீண்