நன்றே செய் அதுவும் இன்றே செய் - புதுக்கவிதை
நடைப்பயிற்சி!
நாளை முதல் செய்வதென
நித்தமும் உறுதி எடுக்கிறேன்;
நாளை என்பது வருங்காலம்,
நேற்றென்பது கடந்த காலம்,
இன்றென்பதே நிகழ்காலம்;
நாளை என்பது நம் கையில் இல்லை,
நாளை நடப்பதை யாரறிவார்;
நன்றே செய்; அதுவும் இன்றே செய்.