புதுக்கவிதை இதுவா
நேரிசை ஆசிரியப்பா
மூன்றுசீரின் வரிகள் மூன்றில் மூன்றுவரி
யிலோபார் நான்குசீர் இருசீர் நான்குவரி
பலரும் ஒரேசீர் கொண்ட பன்னிரெண்டு
வரியிலே கிறுக்கித் தள்ளவும் வெறியாய்
அதிலும் எதையோத் தேடு கின்றான்
கற்க கற்றதைக் கடவுளே அறிவார்
ஓரசை ஓரசை என்றும் காட்டுவர்
ஒருசீர் பாட்டு அற்புதமாம் அதிலும்
சொல்வதோ புளுகு ஆயினும்
சொல்வர் கேட்காதீர் இதுவே
இலக்கணம் ஒதுக்கினப் புதுக்கவி தையாமோ