தலை மாலை அணிந்த சிவனே

தேவாரம்

தலையே நீவணங்காய் - தலை
மாலை தலைக்கணிந்து
தலையா லேபலி தேருந் தலைவனைத்
தலையே நீவணங்காய்.


பொழிப்புரை :
தலைகளால் ஆகிய மாலையைத் தலையில் அணிந்து மண்டையோட்டில் எடுக்கும் பிச்சைக்கு உலாவும் தலைவனைத் தலையே! நீ வணங்குவாயாக.

எழுதியவர் : திருநாவுக்கரசர் (12-Nov-22, 8:48 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 34

மேலே