மரணமே

மரணமே!
உன்னைப் புரிந்துகொள்ள
ஒரு தடவையாவது
மரணித்துப் பார்க்கதத் தோன்றுகிறது
பாவம் புண்ணியம்
நல்லது கெட்டது
மதி விதி சதி
இவையெல்லாம் உனக்குத்
தெரியுமாவென எனக்குத்
தெரியாது
இல்லையென்றால்
புண்ணியம் செய்தவன்
பொசுக்கென்று போகிறான்
பாவம் பண்ணுகிறவன்
பரம்பரையாக வாழ்கிறான்
நல்லது செய்தவன் நாள்பட
கிடக்கிறான் படுக்கையில்
கெட்டது செய்தவன் கெத்தாக
சாகிறான் கடைசியில்
எல்லாம் விதி என்கிறவன்
வீணாகச் சாகிறான்
மதியால் விதியை வென்றவன்
சதியால் மாண்டு போகிறான்
மரணமே!
உண்மையைச் சொல்
உன்னை இயக்குபவன் யார்
அவனுக்கு மரணம் உண்டா இல்லையா
பிறந்தவன் ஒருநாள் இறக்கத்தான்
வேண்டும்
அதற்காக ஒரு வரைமுறை இல்லையா
மரணமே நீ ஒரு தடவை
மரித்துப்பார்
தெரியும் மற்றவர் வேதனை

அறந்தை ரவிராஜன்

எழுதியவர் : ரவிராஜன் (13-Nov-22, 9:49 am)
சேர்த்தது : ரவிராஜன்
Tanglish : maranamae
பார்வை : 69

மேலே