நினைவுகளின் வடம்

மிதமாகவும் மிகவேகமாயும்
கடந்து போகும்
கணங்களுக்கு இடையே
தட்டுத் தடுமாறி
நடக்க முயல்கிறேன்!!

இழுத்துப் பிடித்து
அழுத்திப் போடும்
நினைவுகளின்
அலைகளில்
சிக்கிச் சுழல்கிறேன்!

கயிறுகள் பாம்பாகவும்
பாம்புகள் கயிறெனவும்
மாறி...
காட்சிப்பிழைகளுக்குள்
காணாமல் போகிறேன்!

வாழ்வதாய் எண்ணி
மரணித்தும்
மரணத்தின் போது
ஜனித்தும்
இயற்கை முரணாகிறேன்!

விருப்பங்களையும்
வெறுப்புகளையும்
கூட்டி தீயிட்டு
நானே வேகிறேன்!

நடந்தேறிய எதிர்பார்ப்புகளை
நிறைவேறா ஆசைகளுடன்
சேர்த்துப்பிடித்து
வடமிழுக்கிறேன்!

நிஜமாய் நீயிருந்த
பொழுதுகளை
நீயற்ற வெறுமை
கணங்களுக்குள்
திணித்து..
மூர்ச்சையாகிறேன்!

எழுதியவர் : (13-Nov-22, 6:56 pm)
சேர்த்தது : Jaicharu
பார்வை : 104

மேலே