Jaicharu - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Jaicharu |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 06-Nov-2022 |
பார்த்தவர்கள் | : 43 |
புள்ளி | : 9 |
மழை மண்ணை
தீண்டியதும்
உயிர்பெறும்
விதைகள் போல....
உன் பார்வை
தீண்டியதில்
அகம்
விழித்தவன் நான்!
பூமிக்கு நோகுமென
தழுவிச்செல்லும்
உன் பாதங்களின்
ஸ்பரிசங்களில்...
சிறிதாய் உயிர்கொடுத்து
பெரிதாய் உயிர் கவரும்
நேசப்பார்வைகளில்;
தொலைகிறேன்!
மறப்பதாய்
நினைத்து...
நாளும்..பொழுதும்
ஆக்ரமிக்கும்
உனது ஆதிக்கத்தில்
அமைதியாய்
சிறைபடுகிறேன்!
மிதமாகவும் மிகவேகமாயும்
கடந்து போகும்
கணங்களுக்கு இடையே
தட்டுத் தடுமாறி
நடக்க முயல்கிறேன்!!
இழுத்துப் பிடித்து
அழுத்திப் போடும்
நினைவுகளின்
அலைகளில்
சிக்கிச் சுழல்கிறேன்!
கயிறுகள் பாம்பாகவும்
பாம்புகள் கயிறெனவும்
மாறி...
காட்சிப்பிழைகளுக்குள்
காணாமல் போகிறேன்!
வாழ்வதாய் எண்ணி
மரணித்தும்
மரணத்தின் போது
ஜனித்தும்
இயற்கை முரணாகிறேன்!
விருப்பங்களையும்
வெறுப்புகளையும்
கூட்டி தீயிட்டு
நானே வேகிறேன்!
நடந்தேறிய எதிர்பார்ப்புகளை
நிறைவேறா ஆசைகளுடன்
சேர்த்துப்பிடித்து
வடமிழுக்கிறேன்!
நிஜமாய் நீயிருந்த
பொழுதுகளை
நீயற்ற வெறுமை
கணங்களுக்குள்
திணித்து..
மூர்ச்சையா
எதை எதையோ தேடிய கணங்களில்
ஏதேச்சையாய் கண்டுபிடித்த
உன்னை....
மீண்டுமொருமுறை தொலைத்துவிட்டேன்!
கண்களுக்கு மறைவாகவும்
இதயத்தின் நிறைவாகவும்
எப்போதுமிருக்கிறாய்...
தூரமாக எனை நோக்கியபடியே!
கண்கள் தொடும் தூரத்திற்குள்ளாக
இருக்க நினைத்து...
கண்காணாத கனாக்காலங்களில்
தொலைகிறேன்!
இருப்புகளும் எதிர்பார்ப்புகளும்
சுழியங்களாகி சுடுகின்றன!
அகங்கார நெருப்பில் அவிந்தது
நான் மட்டுமல்ல!
எனக்குள்ளே உயிர்த்திருந்த
நீயும்தான்!
பிரிவுகள் நிறைய கற்றுக்கொடுக்கின்றன!
முதல்முறையாக...
ஒத்துக்கொள்கிறேன்!
நீயற்ற நான்....
வெற்றுக்காகிதமென்பதை!!!
எனைக் கண்டதும் பூக்கும் எளிய புன்னகைகளுக்குள்
இதயத்தின்
அடி ஆழத்திலிருந்து..
வேட்கையாய்
மிகுந்தெழுந்து...
ஆட்கொள்ளும்
ஆகச்சிறந்த
அன்பிற்கு...
இறையிடம்
எப்போதும்
தடையில்லை!
கவனமாக
இருங்கள்!
அன்பினது....
வழிகளில்
ஆகச்சிறந்த
பக்திக்கு முன்
சூறாவளியாய்
சுழற்றிப்போடும்
காதல்....
நீட்சியடைந்து
வேறொன்றாகிவிடாது
இருக்க!!
சிறு தீண்டலில்
உயிர் உலுக்கும்
நேசத்தின் உச்சம் நீ!
சிறு புன்னகையின்
வீச்சுகளில்
இருளகற்றும்
வெளிச்சம் நீ!
வேண்டாம் என்றாலும்
வேண்டி நின்றாலும்
தூறாலாகி..பெய்துசெல்லும்
மழை வெள்ளம் நீ!
அந்தகாரம் நிறைந்த
புதிர் நீ!
என்னவாக இருந்தாலும்
உயிர்பற்றும்
பொறி நீ...
நித்தம் வெந்தனலில்
எரிக்கும் ருத்ரம் நீ!