வெற்றுக்காகிதம்

எதை எதையோ தேடிய கணங்களில்
ஏதேச்சையாய் கண்டுபிடித்த
உன்னை....
மீண்டுமொருமுறை தொலைத்துவிட்டேன்!
கண்களுக்கு மறைவாகவும்
இதயத்தின் நிறைவாகவும்
எப்போதுமிருக்கிறாய்...
தூரமாக எனை நோக்கியபடியே!
கண்கள் தொடும் தூரத்திற்குள்ளாக
இருக்க நினைத்து...
கண்காணாத கனாக்காலங்களில்
தொலைகிறேன்!
இருப்புகளும் எதிர்பார்ப்புகளும்
சுழியங்களாகி சுடுகின்றன!
அகங்கார நெருப்பில் அவிந்தது
நான் மட்டுமல்ல!
எனக்குள்ளே உயிர்த்திருந்த
நீயும்தான்!
பிரிவுகள் நிறைய கற்றுக்கொடுக்கின்றன!
முதல்முறையாக...
ஒத்துக்கொள்கிறேன்!
நீயற்ற நான்....
வெற்றுக்காகிதமென்பதை!!!

எழுதியவர் : ஜெய்சாரு (11-Nov-22, 8:10 am)
சேர்த்தது : Jaicharu
பார்வை : 86

மேலே