தனிமை பழகு
எனக்காக
நானே
உருவாக்கிக்கொண்ட
தனிமைகள்
வெகு..அழகானவை!
ஆணவபேச்சுகளுக்கும்
அடிமைத்தனங்களுக்கும்
அர்த்தமற்ற.. அனர்த்த
புகழுரைகளுக்கும்
ஆங்கே இடமில்லை!
ஆயிரம் அலங்கார
ஒப்பனைகளைவிட
வெறுமைகள்
அழகானவை!
கடல் அழகு..அலை அழகு
கால் நனைக்கும்
தண்மை அழகு..
வானழகு..வையம்
அழகோஅழகு!
அத்தனைக்கு சாட்சியாய்
இருத்தல் அழகு!
இருக்க பழகு!