அங்கமெலாம் தங்கமாய் நீயும்

வடிவம் 1

செங்கதிர் வானில் சுடராய் விரிந்திட
செங்கமலம் பொய்கையில் பூமடல்தி றந்திட
தங்கமென மின்னிடும் பொய்கைக் கரையினில்
அங்கமெலாம் தங்கமாய்நீ யும்


வடிவம் 2

செங்கதிர் வானில் சுடராய் விரிந்திட
செங்கமலம் பூமடல்தி றந்திட --திங்கள்நீ
தங்கமென மின்னிடும் பொய்கைக் கரையினில்
அங்கமெலாம் தங்கமாய்வந் தாய்

எழுதியவர் : கவின் சாரலன் (11-Nov-22, 9:54 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 56

மேலே