மதிமுகம்

மழை மண்ணை
தீண்டியதும்
உயிர்பெறும்
விதைகள் போல....
உன் பார்வை
தீண்டியதில்
அகம்
விழித்தவன் நான்!
பூமிக்கு நோகுமென
தழுவிச்செல்லும்
உன் பாதங்களின்
ஸ்பரிசங்களில்...
சிறிதாய் உயிர்கொடுத்து
பெரிதாய் உயிர் கவரும்
நேசப்பார்வைகளில்;
தொலைகிறேன்!
மறப்பதாய்
நினைத்து...
நாளும்..பொழுதும்
ஆக்ரமிக்கும்
உனது ஆதிக்கத்தில்
அமைதியாய்
சிறைபடுகிறேன்!

எழுதியவர் : ஜெய்சாரு (18-Nov-22, 6:44 pm)
சேர்த்தது : Jaicharu
பார்வை : 119

மேலே