என்னைப்பார்
விடைபெறுமுன் - உன்
விழிப்பார்வையை பார்த்துவிட
அலைகிறேன்...
அதில் தெரியும் அத்தனை
செய்திகளையும் வாசித்துவிடத்
துடிக்கிறேன் ...
பார்வை போய்விடின்
இருள் சூழ்ந்துவிடுமே
அப்புறம் வெறும் இருட்டுதானே..
தாக்கும் அந்தகாரம்தானே...
முடிவதற்குள்
கண்ணே...அருகில்வந்து
என் விழியோடு விழி வைத்து
என்னைப்பார்.