எழுத்தின் 18 ஆம் ஆண்டு விழா

நேரிசை வெண்பா

பதினெட்டாண் டாகி யுமேதான் எழுத்து
சதியாலே குட்டை சகதி -- எதிலும்
கதியை மறந்துப்பின் ஐதீக மும்தான்
பதிந்தனரேக் காதலெனப் பாட்டு

கதி == நடை (எழுத்தின்)

எழுத்தென அஃதென் எழுத்து தமிழோ
கொழுத்ததோர் ஆங்கிலமோக் கொன்றார் -- பழுத்திடா
பிஞ்சும் அனாதை பெயற்காட்டா எல்லாமும்
விஞ்ச எழுதவந்தார் வென்று


மரத்தைநட்டு நீர்மடை மாற்றாத் தளமாம்
சிரத்தை விடக்கெடும் சீரும் -- அரகரா
தானே வளர்ந்து தழைக்கா அழியுதப்பா
மானேதே னேப்போது மாம்


....

எழுதியவர் : பழனி ராஜன் (18-Nov-22, 2:17 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 36

மேலே