காதல் வாழ்க்கை துணை நீ 💕❤️

அன்புக்கு எல்லையில்லை

அவளை வர்ணிக்க வார்த்தை

இல்லை

நான் வாழ காரணம் அவளை தவிர

வேறு யாரும் இல்லை

நிழல் இல்லாமல் நிஜம் இல்லை

நீ இல்லாமல் நான் இல்லை

என் வாழ்க்கை துணையாக நீ வர

என்ன தவம் செய்தேன் என

தெரியவில்லை

கடவுளுக்கு நன்றி சொல்ல எனக்கு

வார்த்தை இல்லை

என் கண்ணுக்கு உள்ளே நீ வாழ்வது

யாருக்கு தெரிவதில்லை

தேவதையே என் காதலியாக

வருவாள்

என நான் நினைக்கவில்லை

உன்னை தவிர வேறு எதுவும்

தேவையில்லை

எழுதியவர் : தாரா (14-Nov-22, 1:47 am)
பார்வை : 365

மேலே