அவள்

அழகிய மலர்ச்சோலை
அழகாய் மலரும் மலர்கள்
எத்தனையோ எத்தனையோ
அத்தனையும் கண்டேன்
கண்ணுக்கு விருந்தாய்
மல்லி முல்லை இருவாச்சி
செண்பகம் ரோசா என
அவை தரும் சுகந்தம்
வானளாவி பரவி நிற்க
தென்றல் அதை தாங்கி
என்னைத் தொட்டு என்மனதையும்
தொட்டு விட்டுப் போக
எங்கிருந்தோ அம்மலர்ச்சோலைக்கு
தேவதையாய் வந்து வருகை தந்தாள்
கன்னி அவள் வந்து
அவள் விரும்பும் பூக்களை
மெல்ல மெல்ல தன்
செங்கமல இதழ்களாம்
விரல்களால் பரித்திட.......

இத்தனை நாழி சோலைப்
பூக்களின் எழிலில் பதிந்த
என் எண்ணமெல்லாம்
ஒரே நொடியில் அவள்
பக்கம் முற்றும் போனது
முற்றுகை இட்டு நின்றது
அங்கு அவள் எதிரில்
கொஞ்சம் திரும்பி அவள்
பார்வை என்மீதும் வீழாதோ
பார்வையிலே காதலும் ஏந்தி
இது என்ன விந்தை
இயற்கை எழிலை ரசிக்க
வந்த எனக்கு இப்படி
மனித வடிவில் மனம்
கவர்ந்த பெண்ணெனும் இயற்கை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Nov-22, 9:30 am)
Tanglish : aval
பார்வை : 168

மேலே