மலக்குழி மரணம்---அறுசீர் விருத்தம்---

அறுசீர் விருத்தம் :

நிலனைந்தின் வளம்பொருத்து நிமிர்ந்தெழவோ? தொழில்நூறு
*****நிலைத்த போழ்தும்
மலமள்ளி மாய்கின்ற வன்பணியை மனிதருக்கு
*****வழங்கல் ஏனோ?
புலனைந்தில் குறைநேரின் புவிவாழ்தல் பெருங்கடினம்
*****புரிந்தும் இங்கே
நலன்செய்ய மாற்றுவழி நல்கிடாது நாடள்வோர்
*****நகர்தல் தீதே... (1)

நிலன் - நிலம்
போழ்து - பொழுது
புலன் - ஐம்புலன்

குலம்பார்த்து முகம்பார்த்து குலத்தோன்றல் இவனென்று
*****கொடுமை செய்வார்
பலன்கொள்ள வழியின்றிப் படுந்துன்பம் குறைவின்றிப்
*****பயத்தைச் சேர்ப்பார்
கலந்தங்கும் நீர்அனலால் கலன்நீங்கும் நிலையன்ன
*****களத்தில் நின்று
புலம்வாழ குழிமூழ்கிப் பொருட்தேடும் ஒருவாழ்வில்
*****புதுமை என்றோ?... (2)

பலன் - பயன்
கலம் - பாத்திரம்
புலம் - நிலம்

(கஉ/கக/உ0ருங)

...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..

எழுதியவர் : இதயம் விஜய் (14-Nov-22, 5:15 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 290

மேலே