இல்லாள்
அவள் தான்"இல்லாள்"
😊
இல்லம் சிறக்க இல்லாள்
உள்ளம் மகிழ இல்லாள்
நம்பிக்கை ஊட்டுவாள் சொல்லால்
பின்தூங்கி முன் எழுவாள் இல்லாள்
ஓயாமல் உழைத்திடுவாள் இல்லாள்
உதாரணமானவள் தன் செயலால்
சுயநலமற்ற குணவதி இல்லாள்
எதிர்காலச் சிந்தனையில் இல்லாள்
எதனையும் தாங்கிடும் தம் மனதால்
குடும்ப விளக்கானவள் இல்லாள்
கணவனுக்கு இணையான இல்லாள்
கவலை மறைப்பாள் தம் முகத்தால்
இல்லானை ஏற்பாள் இல்லாள்
பொல்லானை திருத்தும் இல்லாள்
மாற்றிக் காட்டுவாள் முனைப்பால்
உயிருக்கு உயிரானவள் இல்லாள்
உயிராய் காத்திடுங்கள் இல்லாள்
அருமை உணர்ந்தாவது இனிமேல்
அறந்தை ரவிராஜன்