அந்த ரோஜாவுக்கு உன்னுடன் உறவு

அந்த ரோஜாவுக்கு உன்னுடன் உறவு
இதழ்களில் கண்டேன்
அந்தி வானுக்கு உன்னுடன் உறவு
கவியும் இமைகளில் கண்டேன்
அந்த நிலவுக்கு உன்னுடன் உறவு
புரியும் புன்னகையில் கண்டேன்
உனக்கு என் நெஞ்சுடன் உறவு
பார்க்கும் பார்வையில் கண்டேன்