புவிமுழுதையும் புன்னகையால் ஈர்த்து பொட்டலமாக

குவிந்த இதழ்களில் சிந்துவது தேனோ
புன்னகை முத்துக்களோ
கவிந்த விழிகளில் அந்தி வானமோ
மலர்ந்திடும் காதலோ
சிவந்த இதழ்களின் செவ்வான ஓவியமே
கலைந்தாடும் கூந்தலழகே
புவிமுழுதையும் புன்னகையால் ஈர்த்து
பொட்டலமாக எடுத்துச் செல்லும் எண்ணமோ ?

எழுதியவர் : கவின் சாரலன் (17-Nov-22, 6:10 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 37

மேலே