சென்னைக் கோயம்பேடு பேருந்து நிலையத்தில்

பயணி: சார், முகுந்தராயபுரம் போக பஸ் இருக்குதுங்களா?
பயணி சேவையாளர்: ராயபுரம் போக பஸ் இருக்குது. அது ராஜா அண்ணாமலைபுரம், ரங்கராஜபுரம் மற்றும் அந்தப்புரம் வழியாகப் போகும். இந்த நாலு புரத்தில் ஏதோ ஒரு புறத்திலிருந்து முகுந்தராயபுரம் போக உங்களுக்கு நிச்சயமாக எதாவது ஒரு பேருந்து கிடைக்கும் என்று ஓரளவுக்கு நினைக்கிறன்.
பயணி: ???

பயணி: இந்த பஸ் ஸ்டாண்டுல திருநெல்வேலி அல்வா கிடைக்குமா?
பயணி சேவையாளர்: இதோ எதிரில் தெரிகிறதே 100B பேருந்து அது இன்னும் கொஞ்ச நேரத்தில் திருநெல்வேலி போகிறது. அதுல ஏறி நீங்க திருநெல்வேலி போனீங்கன்னா, ஒரிஜினல் திருநெல்வேலி ஹல்வா சூடா வாங்கிச் சாப்பிடலாமே?
பயணி: ???

பயணி: ஏங்க, மேட்டூரிலிருந்து மேட்டுப்பாளையம் பக்கமா?
பயணி சேவையாளர்: சேலத்திலிருந்து சின்னசேலம் போற தூரம் இருக்குங்க.
பயணி: ???

பயணி: மயிலாடுதுறைக்குப் போனா, மயில் ஆடுறதை வேடிக்கை பாக்கமுடியுமா?
பயணி சேவையாளர்: அது எனக்கு அவ்வளவு சரியாகத்தெரியலை. ஆனால் இப்போ ஒரு பெரிய தடியால் உங்களை அடிச்சு, நீங்க ஆடும்போது இங்கே பலர் கண்டிப்பாக வேடிக்கை பார்ப்பார்கள்.
பயணி: ???

பயணி: ஏங்க, திருஆவினன்குடியிலிருந்து காரைக்குடி, தூத்துக்குடி, திட்டக்குடி வழியாக ஆலங்குடிக்கு போற பஸ் இருக்குதா?
பயணி சேவையாளர்: ஒரு பேருந்து இருக்கு. அதுக்கு நீங்க முதலில் முருகன்குடிக்கு போய் அந்த ஊரு சாத்துக்குடி வாங்கி சாப்பிட்டுவிட்டு வாங்குடி, வேம்புக்குடி வழியாக ஊத்துக்குடி போகிற பேருந்தில் போகணும். வழியில் விளாங்குடி என்கிற ஊரில் உங்களை இறக்கி உட்டுடுவாங்க. அங்கிருந்து பொடி நடையாக நூறு கிலோமீட்டர் தூரம் பரமக்குடி வழியாக நடந்துபோனா, ஊத்துக்குடி வந்துவிடும். அங்கே அரை கிலோ வெண்ணெயை வாங்கி சாப்பிட்டுக்கோங்க. ஏன்னா அங்கிருந்து திருஆவினன்குடி செல்ல ரேக்ளா வண்டில ஆறு மணி நேரம் பயணம் செய்யணும். ஊத்துக்குடியில் நீங்க வெண்ணை வாங்கி சாப்பிடும்போது எனக்கு ஒரு போன் கால் போடுங்க. திருவள்ளுவர் டிரான்ஸ்போர்ட் அதுக்குள்ள உங்களுக்கு திருஆவினன்குடியிலிருந்து பஸ் ஏற்பாடு செய்துவிடும். திருஆவினன்குடியிலிருந்து நீங்க கேட்டமாதிரி காரைக்குடி, தூத்துக்குடி, திட்டக்குடி வழியாக ஆலங்குடிக்கு போகலாம். எனிமோர் க்ளாரிபிகேஷன்ஸ்?
பயணி: ???****????####!!!!!?????

பயணி: காசி டு தென்காசின்னு பஸ்சுல போட்டிருக்கே. அப்படீன்னா இந்தப்பேருந்து வாரணாசியிலிருந்து தென்காசி போகுதுங்களா?
பயணி சேவையாளர்: நீங்க ஒண்ணு தமாஷா பேசுறீங்க. இந்தப்பேருந்து சென்னை அசோக்நகர் காசி தியேட்டர் பஸ் ஸ்டாண்டிலிருந்து கிளம்பி தென்காசிக்குப் போகிறது.
பயணி: ???

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (25-Nov-22, 7:28 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 67

சிறந்த நகைச்சுவைகள்

மேலே