பிரிவு....................!

கனவென்று ஒதுக்கவும்
முடியவில்லை.

நினைவென்று நிறுத்தவும்
முடியவில்லை.

நொடி தாமதித்தாலும்
நொறுங்கிப்போன நான்,
இன்று நீ இல்லாமல்
வாழப் பழகிக்கொண்டு
இருக்கிறேன்.

தெருவினில் நடக்கையில்
நீளும் ஆட்காட்டிவிரல்கள்
என்னை விமர்சனம்
செய்வதாகவே உணர்கிறேன்.

தனிமை கிடைக்கும்
போது எல்லாம்
எனக்குள்ளே உன்னிடம்
பேசிக்கொள்கிறேன்.

மீண்டும் ஒருமுறை
வருமா அந்த
வசந்த காலம் என்று
ஏங்கித் தவிக்கிறேன்
உன் பிரிவால்!!

எழுதியவர் : messersuresh (10-Oct-11, 4:42 pm)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
பார்வை : 344

மேலே