இளைப்பாற இடம் கூறுங்கள்

பிரிவென்ற சொல்லை கேட்டதுகூட
இல்லை
நீ எனைபிரிந்து சென்ற நொடி
வரை.

கார்கால மேகமாய் வந்த நீ
நொடியில் மறைந்தாய்
கானல் நீராய்.

பாலைவன பயணி போல்கண்கள் இடுக்கிப் பார்க்கிறேன்.
தூரத்தில் நீ தெரிகிறாயா என்று??

இரவினில் மல்லாந்து படுக்கையில்
வானில் தெரியும் அருந்ததி நட்சத்திரம் மறைந்து விளையாட்டு காட்டுவது உன் நினைவை தருகிறது.

ஓடிக்களைத்த பின் இளைப்பாற நிழல் உண்டு.
ஆனால்................?
காதலில் தோற்ற பின்இளைப்பாற இடம் ஏது?
கூறுங்களேன்.

எழுதியவர் : messersuresh (10-Oct-11, 4:33 pm)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
பார்வை : 282

மேலே