சின்னக் கண்ணன் மாயக் கிருஷ்ணன்

நேரிசை ஆசிரியப்பா
மாற்று துணியும் கரையில் வைத்து
மங்கையர் அவரே மஞ்சளில் குளிக்க
அங்கன் மால்சிறு வனுயரே மரத்தில்
கோபியர் உடைதனை களவு செய்து
தொங்க விட்டு குழலூ திக்குந்தி
இருந்தான் சின்ன கண்ணன்
குறும்பை விகற்பம் செய்தார் ஈனரே

மாதர் தம்மை இழிவு செய்யும்
ஈனர் பொறுக்கா மாயனாம் கிருஷ்ணன்
துச்சனும் இழுக்க மாளா நீளத்
துணியை நீட்டி மங்கை மானம்
காத்த செய்கை பொய்யாம்
சொல்லிச் சிரிக்கும் கயவர் உண்டே

சோப்பு போட்டு குளிக்க குழந்தை
தண்ணீர் செம்பையும் ஒளித்தனாம்
கதையிங் கேக்கண்டு பாட்டெழு தினேனே

எழுதியவர் : பழனி ராஜன் (6-Dec-22, 1:01 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 32

மேலே