இரங்கற்பா

என்றோ உலைவைத்த
உண்டிவில் உயிர்களுக்கு
உச் கொட்டியவள்

இன்றோ
மாப்பிள்ளை என்ஆர்ஐ என்றதும்
உருமாறிப்போனாள்!

கொன்றவனாய்......
கொலையுண்டவனாய்...

இருப்பவைக்கும்...
இறந்தவைக்கும்...

எழுதிக்கொண்டிருக்கிறேன்
இரங்கற்பா.

எழுதியவர் : ஜ. கோபிநாத் (6-Dec-22, 3:45 pm)
சேர்த்தது : Gopinath J
பார்வை : 30

மேலே